குக் வித் கோமாளி சீசன் போரிலிருந்து வெளியேறிய மணிமேகலை!!!
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியானது குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இது காமெடி மற்றும் சமையல் கலந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது இதற்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று சீசன்களிலும் கோமாளி ஆகி கலக்கி வந்த மணிமேகலை தற்போது நடைபெற்று வரும் நான்காவது சீசனிலும் இடம் பெற்றிருந்தார் ஆனால் தற்போது அவர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தனது வலைதள பக்கங்களில் அறிவித்திருக்கிறார். அதில் அவர் கூறுகையில் கடந்த மூன்று சீஸ் சீசன்களில் தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றும் தான் இனி எடுக்கப் போகும்போது முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவு இருக்கும் என்றும் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.