மன்சூர் அலி கான் தளபதி 67 படத்தில்!!!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் படம் தளபதி 67. இந்தப் படம் ஒரு ஃபேன் இந்தியா படமாக உருவாக உள்ளது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆனது ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் பட குழுவினர் இன்று காஷ்மீருக்கு சென்றுள்ளனர் அங்கு சில நாள் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறுகின்றார்கள்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் நடிகைகளின் தகவல்களை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது twitter பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் மன்சூர் அலிகான் இருப்பதாக பட குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் சஞ்சய் தத் பிரியா ஆனந்த் சாண்டி மிஸ்கின் போன்றோர் இருப்பதை பட குழு ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது.
வெளியான அந்த அதிகாரப்பூர்வ தகவல் " யானும் இணைகிறேன் தளபதி 67 லோகேஷ் நீ ஆர்ப்பரித்தழ விரைவில் சந்திப்போம் மக்களே" . என குறிப்பிட்டு அந்த போஸ்டர் வெளியாகி உள்ளது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் மேலும் அடுத்த அதிகாரப்பூர்வ தகவல் ஆனது இரவு 8 மணிக்கு வெளியாகும் என கருதப்படுகின்றது.
Comments
Post a Comment